தோத்தோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Description
தமிழாக்கம்: அ.வள்ளிநாயகம், சொ. பிரபாகரன்
நான் தோமோய் பள்ளியைப் பற்றி இன்னும் நிறைய எழுத முடியும். ஆனால் தோத்தோ-சானைப் போன்ற ஒரு சிறுமிகூட பெரியவர்களின் மிகச் சரியான வழிகாட்டுதலுடன், மற்றவர்களுடன் கூடிப்பழகும் வகையில் நல்ல பெண்ணாக எப்படி வளர்ந்தாள் என்பதை மற்றவர்களை செய்தால் அதுவே போதுமானது என நினைக்கிறேன். உணரச்
குழந்தைகளின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் வளர்க்கப் போதிய அளவிற்கு சுதந்திரமான பாடத்திட்டமும், குறைந்த அளவு மாணவர்களைக் கொண்ட வகுப்பும் இருக்குமாறு பார்த்துக்கொண்டார் திரு. கோபயாஷி. தோமோய் போன்ற பள்ளிகள் நிறைய இருந்தால், இன்று நாம் எதிர்கொள்வது போன்ற வன்முறையும், பள்ளி இடைநிற்றலும் இருக்காது என்று நம்புகிறேன். தோமோய் பள்ளியில் பள்ளி நேரம் முடிந்தபிறகும்கூட குழந்தைகள் வீட்டிற்குப் போக விரும்பியதில்லை. அதே போல் காலையிலும் மாணவர்கள் பள்ளிக்கு வர அதிக நேரம் காத்திருப்பதில்லை. தோமோய் பள்ளி அப்படிப்பட்டது!
தோமோய் தற்போது இல்லை. ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்த பின் உங்கள் நினைவில் தோமோய் நிற்குமானால் அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சியாகும்.
ஜப்பானிய மொழியில் வெளிவந்த ஒரே ஆண்டில் 45,00,000 பிரதிகள் விற்பனையாகி தோத்தோ-சான் வரலாறு படைத்தது. ஆங்கிலம் உள்பட உலகின் பல்வேறு மொழிகளில் வெளிவந்த இந்நூல், இந்தியாவிலும் பல மொழிகளில் பதிப்பிக்கப்பெற்று, பல்லாயிரம் பிரதிகள் விற்பனையைக் கண்டுள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர், கல்வித்துறையினர், வளரிளம் பருவத்தினர் என பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ள நூல் இது.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 204 |
| Format | paperback |
| ISBN | 9789367194218 |



Reviews
There are no reviews yet.