நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள்
Original price was: ₹575.00.₹517.00Current price is: ₹517.00.
Description
கற்பனையின் உச்சம், நாட்டுப்புறக் கதைகள். மாய யதார்த்தம் என்று பெயரிட்டு நாம் அழைக்கும் நவீன இலக்கிய வடிவத்தின் வேர், வேறெங்கும் அல்ல நாட்டுப்புறக்கதைகளில்தான் அடங்கியிருக்கிறது. வரலாற்றின் கரங்களுக்கு இதுவரை அகப் படாத ஓர் அழகிய கடந்த காலத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? நம் பண்பாட்டு அடையாளங்களை அறிய வேண்டுமா? நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை, நம்பிக்கைகளை, கனவுகளை, ஏக்கங்களை, அச்சங்களைத் தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் உண்டா? இக்கதைகள் உங்களுக் கானவை. நமக்கானவை. மனித குலம் முழுவதற்குமானவை.
பிரபஞ்சம் எப்படி உருவானது எனும் கேள்விக்கு எப்படி அறிவியலால் ஒரு தீர்மானமான விடையை அளிக்கமுடிய வில்லையோ அதேபோல் இக்கதைகள் எப்படி உருவாயின எனும் கேள்விக்கும் எவரும் விடையளித்துவிட முடியாது. காற்றுபோல் எங்கோ தோன்றி, எங்கெங்கோ பரவி, எப்படியோ உயிர்த்திருக்கின்றன. பல யுகங்கள், பல பண்பாடுகள், பல மனங்கள், பல வாய்கள், பல காதுகள், பல இதயங்கள் வாயிலாக நம்மை வந்தடைந்திருக்கின்றன. இவை நம் பெருமிதம்.
அரும்பாடுபட்டு கன்னட நிலத்திலிருந்து அள்ளியெடுத்துவந்து அழகிய தமிழில் இக்கதைகளை நமக்கு அளித்திருக்கிறார் பாவண்ணன். மயக்க வைக்கும் ஒரு மாய உலகுக்கு இந்நூல் உங்களை அழைத்துச் செல்லக் காத்திருக்கிறது.
Additional information
| Weight | 0.65 g |
|---|---|
| Dimensions | 2.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 504 |
| Format | paperback |
| ISBN | 9789347936722 |



Reviews
There are no reviews yet.