நிஜத்தைத் தேடி
Original price was: ₹105.00.₹100.00Current price is: ₹100.00.
Description
நவீன தமிழ் ஆராய்ச்சியின் பல சிகரங்களைத் தொட்டவரின் – பல எல்லைகளைக் கடந்தவரின்- கன்னி முயற்சிகள் எப்படியிருந்திருக்கும்?
ஸ்ரீரங்கம் எஸ்.ரங்கராஜன் என்கிற சுஜாதாவின் இத் தொகுப்பில் பதில் கிடைக்கும்.
இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதை களை ஸ்ரீரங்கம் எஸ்.ரங்கராஜன், எஸ்.ரங்கராஜன், எஸ்.ஆர்.ராஜன் என்கிற பெயரில் சுஜாதா குமுதம், கணையாழிகளில் 60-70களில் எழுதியிருந்த ஆரம்பகாலக் கதைகள். அடுத்து 70-80களில் எழுதியவற்றின் பிரதிநிதி களாகச் சில சிறுகதைகளும் அண்மையில் 84-ல் கல்கியில் வெளிவந்த ஒரு குறுநாவலும் இதில் உள்ளன.
பெரும்பாலும் வாழ்வின் மறுபக்கத்தைக் காட்டும் படைப்புக்களே இவை. எத்தர்கள், இடைத்தரகர்கள், பிச்சைக்காரர்கள், பஸ் முதலாளிகள், இளைய கணவன் என்று பலதரப்பட்ட மனிதர்களின் பல செயல்கள் நிகழ்ச்சிகளாகச் சித்திரிக்கப்படுகின்றன. அதன் பின் புறத்தில் நிகழும் மன உணர்வுகளைப் பற்றிய ஆழமான சிந்தனைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன இக்கதைகள்.
வாசகர்களுக்கு இத் தொகுப்பு பிரத்யேக சுவையை யும் பயனையும் தரும் என நம்புகிறேன்.
சுஜாதாவின் ஆரம்ப கால எழுத்துக்களை குமுதத் திலும், தீபத்திலும் நகலெடுத்துக்கொள்ள அனுமதி யளித்து உதவிய எஸ்.ஏ.பி.அவர்கட்கும், தீபம் நா. பார்த்தசாரதி அவர்கட்கும் நம் நன்றி.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.