நேர்படப் பேசு எண்ணி – தெளிவாய் – தமிழில்
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
யாருக்கும் வெட்கமில்லை என்பது மறைந்த எழுத்தாளர், வழக்கறிஞர், நடிகர் மற்றும் அரசியல் விமர்சகர் சோ அவர்களின் நாடகத்தின் தலைப்பு. இன்றைய காலத்தின் மிகப் பெரிய நெருக்கடிகளில் ஒன்று. யாருக்கும் நேரமில்லை என்பதுதான். நேரத்தின் அளவு குறையவில்லை; மாறாக வாழும் காலம் அதிகரித்திருக்கிறது. இருந்தாலும் பார்க்க, கேட்க, படிக்க, தெரிந்துகொள்ள, அனுபவிக்க வேண்டியவைகள் அளவுக்கு மீறி இருப்பதால் நேரம் போதவில்லை.
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், நமக்கு இல்லாதது நேரமல்ல; கவனமே. எல்லாம் தெரிந்ததுபோல் தோன்றும் காலத்தில், முக்கியமானவற்றைத் தவறவிடும் அபாயமே அதிகம். அந்த இடைவெளியை நிரப்ப, தேவையற்ற விரிவுகளை விலக்கி, சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்வதற்காக உருவான நூலே நேர்படப் பேசு.
மனித முன்னேற்றம், மனித உறவுகள், மொழி. உரையாடல் கலாசாரம் என வாழ்க்கையின் அத்தியாவசிய பகுதிகளை நான்கு பகுதிகளாகப் பிரித்து, சிறு கட்டுரைகளின் வழியாக எளிமையாக எடுத்துரைக்கிறது இந்த நூல். நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளும் விழுமியங்கள், பிறரைப் புரிந்து கையாளும் நுணுக் கங்கள், சமூகத்திற்கு பங்களித்த தமிழறிஞர்களின் வாழ்வுப் பாதைகள், அன்றாட உரையாடல்களை அர்த்தமுள்ள அனுபவங் களாக்கும் வழிகள் என வாசகனை பல தளங்களில் சிந்திக்க வைக்கிறது.
அவசர உலகில் அவசியமான சிந்தனைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லும் இந்தப் புத்தகம், வாசித்துவிட்டு வைக்கக்கூடியதல்ல; வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN | 9789347936975 |



Reviews
There are no reviews yet.