பகவான் புத்தர்
Original price was: ₹270.00.₹256.00Current price is: ₹256.00.
Description
மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ.
உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர் அரசவாழ்வைத் துறந்து மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழிகாண முயன்று வெற்றி கண்டவர். அவருடைய அறவழி, சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் பரவியது. நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து பீகாரில் உள்ள கயை என்ற இடத்தில் அரசமரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார். அதனால் அது போதிமரம் என்று பெயர் பெற்றது. பின்னர் குசிநகரா என்ற இடத்தில் புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார். இந்நூல் அவருடைய பிறப்பு, குடும்பத்தைத் துறந்து செல்லுதல், சமகால இந்தியத் தத்துவங்களுடன் உள்ள தொடர்பு, அது பற்றிய தொடக்க கால விவாதங்கள் ஆகியவற்றைக் கூர்மையாக ஆராய்கிறது.
பகவான் புத்தர் என்னும் இந்த நூலை மராட்டியில் எழுதிய தர்மானந்த கோஸம்பி, பாலி மொழியிலும் இலக்கியத்திலும் புலமை பெற்றவர். உலகப் புகழ்பெற்ற அறிஞர். தீட்சை பெற்ற துறவியாகிய கோஸம்பி, தாம் பயின்ற புத்த தத்துவத்தின் சாரமாக இந்நூலை எளிய நடையில் மராட்டியில் எழுதியிருக்கிறார்.
இந்நூலைத் திறம்பட மராட்டியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார் மொழிபெயர்ப்பாளரான கா.ஸ்ரீ.ஸ்ரீ. இவர் மராட்டி புகழ்பெற்ற மொழியில் புலமை பெற்றவர். காண்டேகரின் பல நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து தந்தவர். மிக அரிய இந்நூலின் பயன் கருதிச் சாகித்திய அகாதெமி அறுபது ஆண்டுகளுக்குப்பின் இதை மறுபதிப்பு செய்துள்ளது.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 1.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 336 |
| Format | paperback |
| ISBN | 9789387567351 |



Reviews
There are no reviews yet.