பஞ்சதந்திரக் கதைகள்
Original price was: ₹375.00.₹356.00Current price is: ₹356.00.
Description
தமிழில்: பி. எஸ். ஆச்சார்யா
இக்கதைகள் மிகவும் பழங்காலத்து நீதிக் கதைகள் என்றாலும், இப்பொழுது படித்தாலும் அவை மிகவும் சுவையாகவும், பயன்மிக்கதாகவும் உள்ளன. நமது மூதாதையர் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு ரசித்து மகிழ்ந்த கதைகள் அல்லவ!
இதன் மூலநூல் சமஸ்கிருதத்தில் உள்ளது. இக்கதைகளின் மேன்மையைக் கொண்டு, இந்நூல் அநேகமாக உலக மொழிகள் அனைத்திலுமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இருந்தாலும், நான் இதை அதன் மொழிபெயர்ப்பாகத் தயாரிக்கவில்லை. அதிலுள்ள கதைகளையும், நீதிகளையும் அப்படியே எனிய தமிழில் வடித்துள்ளேன். அதாவது அந்நூலுக்கு அழகான தமிழ் வடிவம் கொடுத்துள்ளேன்.
நம் தமிழில்கூட, எத்தனையோ ‘பஞ்ச தந்திரக் கதைகள்’ முன்பே வெளியாகியிருக்கலாம். ஆனால், இதுபோன்று – விரிவாக – அதில் கூறப்பட்டுள்ள நீதிகள் ஒன்றையும் விடாமல் – வெளிவந்ததே இல்லை. அந்த வகையில் நீங்கள் இதையே முதல் நூலாகக் கொள்ளலாம். ஒவ்வொரு கதாபரத்திரமும் – குருவியும் காக்கையும்கூட சமயத்திற்கேற்ற நீதிகளைப் பேசுகின்றன. கதைப்படி அவை யாருக்கோ என்று இருந்தாலும், அனைத்தும் நமக்கும்தான் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஓர் அரசை – ஓர் நாட்டை அரசன் ஒருவன் வெற்றிகரமாக எப்படி அரசு புரிய வேண்டும் என்பதற்கான நீதிகள் அநேகம் இதில் மலிந்துள்ளன. இப்பொழுது எங்கும் அரசன் என்றில்லாவிட்டாலும், அதே நீதிகள் இப்பொழுது ஒரு ஸ்தாபனத்தை ஒழுங்காக நடத்துவதற்கும், ஒரு பெரிய குடும்பத்தை நன்கு நிர்வகிப்பதற்கும், மிகவும் பயனுள்ளவையாக அமைந்துள்ளனவே!
Somasanma, P. S. Acharya, Narmada Pathippagam
Additional information
| Weight | 1 g |
|---|---|
| Dimensions | 3.2 × 19 × 25.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 424 |
| Format | Hard cover |
| ISBN | 9789386433688 |



Reviews
There are no reviews yet.