பல்லவப் பேரரசுதமிழர் வாழ்வு
Original price was: ₹460.00.₹437.00Current price is: ₹437.00.
Description
சங்க காலத்திலேயே வேதசமயம், சமணம், புத்தம் இங்கே வந்துவிட்டன. அவற்றோடு பிராக்ருதமும் சம்ஸ் கிருதமும் நிச்சயம் வந்திருக்கும். தமிழ் மன்னர்களின் ஆதரவைப் பெற்ற வடவர்கள் தங்கள் மொழிகளில் புகழ் மாலைகளுடனான பட்டயங்களைத் தயாரித்துக் கொடுத்ததில் நம்மவர்கள் பூரித்துப்போனார்கள் என்றே கொள்ள வேண்டும்.
‘மக்களுக்கு சமணத்தின் மீது பெரும் ஈடுபாடு இருந்தது. பௌத்த மடாலயங்கள் பாழடைந்து கிடந்தன. பல்லவரின் தொண்டை மண்டலம் திராவிட நாடு என அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் பல்லவர் காலத்திலேயே புழக்கத்தில் இருந்தது! அதன் தலைநகரமாம் காஞ்சிபுரத்தில் பல்லாயிரம் பௌத்த பிஷுக்கள் இருந்தனர்.
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆளத் தொடங்கிய பல்லவர்கள் அக்காலத்தில் அந்த நாட்டு மக்களின் மொழி தெரியாத அன்னியர்களாக இருப்பார்களா? இருந்தால், பிற்காலப் பல்லவப் பேரரசு காவிரிக்கரை வரையிலானதாக நீண்டிருக்க முடியுமா? நீண்டு கி.பி.900 வரை ஆண்டிருக்க முடியுமா? முடியாது என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
சமணம் புத்தத்தை வீழ்த்தி சைவம் – வைணவம் வந்தது வெறும் சமய மாற்றம் அல்ல; அதன் வழியான காத்திரமான சமுதாய மாற்றம். சங்ககால களப்பிரர் காலத்தில் இல்லாத கறாரான வருண சமுதாயக் கட்டமைப்பு இப்போது நிலைநிறுத்தப்பட்டது.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 304 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.