பாலஸ்தீனம்: போர்க்களம் + காதல் புறாக்கள்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
பாலஸ்தீனம் எழுதித் தீர்க்க முடியாத வரலாற்றை. வாழ்க்கைச் சோகங்களை, தியாகங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் ஒரு பூமி. பாலஸ்தீன வரைபடம் சுருங்கிச் சுருங்கி அல்லது சுருக்கிச் சுருக்கி காசா பாலஸ்தீனம், மேற்குக்கரை பாலஸ்தீனம் என்று துண்டு துண்டாகக் கிடக்கின்றன.
”ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம்” என்று ஒரு சொலவடை உண்டு. இப்படித்தான் ஒண்டவந்த இஸ்ரேல் பிடாரி ஊர் பிடாரியாம் பாலஸ்தீனத்தை விரட்டிக் கொண்டிருக்கிறது.
பாலஸ்தீன மக்கள் குண்டு வெடிப்புகளின் சத்தங்களை கேட்காமல், வாழ்விடங்கள் தகர்ந்து தரைமட்டமாவதைப் பார்க்காமல் இருக்கும் நாட்கள் இல்லை என்றே சொல்லலாம். வான்வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் மரணங்களும் மனித ஓலங்களும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. ஐநா சபையும், உலக சமூகமும் இஸ்ரேலின் மனித உரிமை மீறலுக்கு எதிராக நிற்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு போராடுகின்றனர். இஸ்ரேலின் அதிபர் நேதன்யாகு போர்க் குற்றவாளி என அறிவிக்கப்படுகிறார். அண்மையில் ஐநா சபையில் அவர் உரையாற்றும்போது அதைக் கேட்க ஆளில்லாமல் உலக நாடுகளின் உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றனர். (அமெரிக்கா தவிர) ஒற்றையாளாக நின்று பேசி அவர் அவமானப்படுகிறார்.
என்று ஆனாலும் இஸ்ரேல் என்ற வல்லூறுக்கு இரையாவோமோ என்று அஞ்சி நிற்கின்ற பிஞ்சுக் குழந்தைகளின் முகங்கள் நம் தூக்கத்தைக் கலைக்கின்றன. இந்தத் துயரத்தில் இருந்து விடுதலை இல்லையா? எப்படிக் கிடைக்கும்? இதற்கு இஸ்ரேல் பாலஸ்தீன முன் வரலாறு தெரிய வேண்டும்; இப்போது உலக நாடுகளின் நடப்பு தெரிய வேண்டும்; இதற்குள் இழையோடும் அரசியல் புரிதலை ஏற்படுத்தாமல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது இயலாது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN | 9789349994805 |



Reviews
There are no reviews yet.