பின்பாட்டு
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
வசனங்களால் புகழ்பெற்றவர்களைவிட, பாடல்களால் புகழ்பெற்று அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்களே அதிகம். ஒரு நல்ல திரைப்பாடல் கதையையும் சூழலையும் தாண்டி, ரசிகனுக்குள் ஏற்படுத்தும் தோற்றங்களும் மாற்றங்களும் கவனத்துக்குரியவை.
தமிழிசையின் நீட்சியாகவும் சாஸ்திரிய சங்கீதத்தின் கலவையாகவும் கருதப்படும் தமிழ்த்திரையிசைப் பாடல்களே இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் அகமாகவும் முகமாகவும் பார்க்கப்படுகின்றன. பின்பாட்டு எனும் தலைப்பில் வெளிவரும் இந்நூல், சிறிய அளவில் தமிழ் மற்றும் இந்தித் திரைப்பாடல்களின் வரலாற்றை தொட்டுக் காட்டுகிறது.
ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கும் மேலாக திரைப்பாடலாசிரியராக இயங்கிவரும் யுகபாரதி, இந்நூல் வழியே காலத்தை வென்ற பல பாடல்களுக்குப் பின்னே நிகழ்ந்த ருசிகரத் தகவல்களைத் தொகுத்தளித்திருக்கிறார். கதைக்காகவும் சூழலுக்காகவுமே திரைப்பாடல்கள் எழுதப்படுகின்றன. எனினும், அப்பாடல்கள் உருவாகும்போது நிகழும் கதைகளும் சூழல்களும் வெளியே வருவதில்லை.
அன்றுமுதல் இன்றுவரை திரைப்பாடல் உருவாக்கத்தின் பின்னணிகளை எழுதியுள்ள யுகபாரதி. இந்நூல் வழியே திரைப்பாடல் ரசிகனுக்கு வேறொரு சாளரத்தைத் திறந்துவிட்டிருக்கிறார்.
<p style=”display:none;”>Pin, Pinn, Bin, Pinh, Paattu, Paatu, Paaddu, Pattu, Yugabharathi, Naernirai</p>
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.5 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 254 |
| Format | Paperback |
| ISBN | 9789789789788 |



Reviews
There are no reviews yet.