புதுமைப்பித்தன் சிறுகதைகள்

Original price was: ₹110.00.Current price is: ₹105.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தொகுப்பாசிரியர்: மீ.ப.சோமசுந்தரம்

“என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்து கொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத்தன்மை வாய்ந்திருக்கிறது. பிறகு நான் எடுத்தாளும் விஷயங்கள்: பலர் வெறுப்பது. விரும்புவது” என்று புதுமைப்பித்தன் ஒருமுறை எழுதினார். அவருடைய புனைபெயரிலும் கதைப் பொ பொருள்களிலும் உள்ள கவர்ச்சி அவருடைய எழுத்து நடையிலும் உண்டு. இதற்கெல்லாம் மேலாக, அவருடைய எழுத்து, மனிதனையும் அவனுடைய வாழ்க்கையையும் பற்றிய ஆழ்ந்த, பரந்த நோக்கையும் முதிர்ந்த சிந்தனையையும் ளடக்கியிருக்கிறது. பலரை மயக்கிய அல்லது மருளச் செய்த அவருடைய சிரிப்புக்கும் கோபத்துக்கும் பின்னால் ஆர்வமும் பரிவும் உள்ளன. இதுவே அவருடைய கதைகளின் சிரஞ்சீவித் தன்மைக்குக் காரணம். “இலக்கியத்தில் சுவையம்சம் என்பது ஜீவத் துடிப்பில்தான் இருக்கிறது” என்ற உள்ளன புதுமைப்பித்தனின் கூற்றுக்கு விளக்கமாக இத்தொகுப்பில் உள்ள பதினாறு கதைகள்.
புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம் (1906-48). திருநெல்வேலியில் பி.ஏ. பட்டம் பெற்ற பிறகு புரட்சிக்கோலம் பூண்டு சென்னையின் பத்திரிக்கை உலகில் புகுந்து, தமது எழுத்தினால் மிகப் பெரிய புரட்சியை இலக்கிய உலகிலே உண்டாக்கியவர். ‘தினமணி’ மற்றும் ‘தினசரி’ பத்திரிகைகளில் பல ஆண்டுகள் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். பிறகு திரைப்படத் துறையிலும் தமது வாழ்வின் கடைசி நாட்களில் எழுத்துப் பணி செய்தார். மணிக்கொடி உள்ளிட்ட பத்திரிக்கைகளில் கருத்தாழம் கொண்ட கதைகளை எழுதி, தமது புதுமையாலும், சிந்தனைக் கூர்மையாலும், ஒப்பற்ற நுட்பத்தாலும், வியக்கத்தக்க நெஞ்சுரத்தோடு கூடிய கதைப் பொருள் வைப்பு முறையாலும், தமிழ்ச் சிறுகதை உலகிலே நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்.

Puthumaipithan, Pudhumaipithan, Pudumaipithan, Putumaipitan, Sirukathaigal, Sirukadhaigal, Sirukathaikal, Sirukadhaikal, M.P. Somasundaram, National Book Trust

Additional information

Weight 0.2 g
Dimensions 0.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

140

Format

paperback

ISBN

9788123753928

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “புதுமைப்பித்தன் சிறுகதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories