மாநகர பயங்கரவாதி
Original price was: ₹175.00.₹166.00Current price is: ₹166.00.
Description
மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள் 2018இல் நடந்த பேரவலங்கள், கொடுங்கோன்மைகள் பற்றிய சித்திரங்கள். அவற்றின்மீதான ஆழமான எதிர்வினைகள். காற்றில் உறைந்திருக்கும் நஞ்சினால் இக்கவிதைகளின் சொற்கள் நனைந்திருக்கின்றன. ஒரு செய்தியாக நாம் கடந்து சென்றுவிட்ட அல்லது நம் நினைவுகளில் மங்கிவிட்ட பல துயரங்களை இக்கவிதைகள் அழியாச் சித்திரமாக்கியிருக்கின்றன. அரசியல் கவிதை மொழிக்கு புதிய பரிமாணத்தை இக்கவிதைகள் வழங்குகின்றன.
தூங்கப் செல்லும்போது கலைஞர்களாகவோ எழுத்தாளர்களாகவோ சமூக-மனித உரிமை செயல்பாட்டாளர்களாகவோ இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்து எழுப்பபட்டு மாநகர பயங்கரவாதிகளாக இழுத்துச் செல்லப்படும் ஒரு பயங்கரமான காலத்தில் வாழ்கிறோம். நமது காலம் மாபெரும் வேட்டை நிலமாக மாறிவிட்டது. இந்த வேட்டை நிலத்தின் ஓலங்களும் விம்மல்களும் ரத்தக் கறைகளும் இக்கவிதைகள் நெடுக பதிவாகின்றன. கவிஞர்களின் பாதுகாக்கபட்ட தூய்மையான அந்தரங்க வெளிகளை உடைத்துக்கொண்டு இக்கவிதைகள் காயம்பட்ட ஒரு மிருகத்தின் கண்களுடன் உங்களிடம் வருகின்றன.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN | 9789387636293 |



Reviews
There are no reviews yet.