மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
Original price was: ₹550.00.₹495.00Current price is: ₹495.00.
Description
தமிழில்: வெ. கோவிந்தசாமி
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், அமெரிக்காவிலுள்ள ஜியார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா நகரில், 1929 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதியன்று, ஆல்பெர்ட்டா கிங், மைக்கேல் லூதர் கிங் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அட்லாண்டாவில் உள்ள மோர்ஹவுஸ் கல்லூரியில், 1948 ஆம் ஆண்டு, பி.ஏ. பட்டம் பெற்றார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில், 1955 ஆம் ஆண்டு, இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதே ஆண்டில், அலபாமாவிலுள்ள மாண்ட்கோமரி டெக்ஸ்டர் அவென்யூ பாப்டிஸ்ட் சர்ச்சில் பாதிரியாராகப் பொறுப்பேற்றார்.
பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒதுக்குமுறையை எதிர்ந்து மாண்ட்கோமரியில் மேற்கொள்ளப்பட்ட, 382 நாட்கள் நீடித்த, பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமைதாங்கினார்.
1957 ஆம் ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட, தெற்கு கிறித்துவத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு முழுவதிலும் போராட்டங்கள் வெடித்த இந்த ஆண்டில், கிங் 7,80,000 மைல்கள் பயணம் செய்து, இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உரையாற்றினார்; குடியிரிமை இயக்கத்தின் பல போராட்டங்களுக்கு தலைமைத் தாங்கினார்.
1963 ஆம் ஆண்டில், அலபாமாவிலுள்ள பர்மிங்காமில் நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்குத் தலைமைத் தாங்கியபோது, கைதுச் செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற, வாஷிங்டன் நகரத்தில் நடைபெற்ற மாபெரும் பேரணிக்குத் தலைமைத் தாங்கிய சிங் ‘நான் ஒரு கனவு காண்கிறேன்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
1964 ஆம் ஆண்டில், மார்ட்டின் லூதர் கிங்குக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, டென்னிஸியிலுள்ள மெம்பிஸ் நகரத்தில் கிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 2.6 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 476 |
| Format | paperback |
| ISBN | 9789393780812 |



Reviews
There are no reviews yet.