முறிந்த அம்புகள்

Original price was: ₹150.00.Current price is: ₹143.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இதிலுள்ள சிறுகதைகள் எனது சின்ன தவங்கள். ஒரு நாவல் எழுத்தாளனாக நான் முதலில் புலப்படத் தொடங்கிய போதிலும் சிறுகதைகளில் தான் என்னால் என் எழுத்தாள நோக்கை ஈடேற்ற முடிந்தது. முடிந்து கொண்டிருக்கிறது. இலக்கிய உலகம் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அம்சம் சிறுகதை. வ.வே.சு. ஐயர் நாளிலிருந்து இன்று வரை ஆயிரமாயிரம் ஜனனம் கண்டுவிட்ட இந்த இலக்கியம் என் வரையில் எளிமையானது. வலிமையானதும் கூட!

ஒரு எழுத்தாளனின் தாகத்தை உடனே தீர்க்க முடிந்த பானம் இது. அவனது மன ஓட்டங்களை உடனுக்குடன் இறக்கி வைக்க முடிந்த சுமை தாங்கியும் கூட. ஒரு வாசகனை இந்த எளிய சாதனத்தால் விரைவாக கைப்பற்றி விடலாம். அவன் மனதுக்குள் நாம் முடிந்த எல்லை போய் வரலாம். திகைப்பு, நெகிழ்ச்சி, சிந்தனை’ என்று பல உணர்வுகளை மிக விரைவாய் மூட்டவும் செய்யலாம்.

இலக்கியப் பரிசோதனைக்கு ஏற்ற, மிக வளைந்து கொடுக்கும் சாதனமும் இதுவே என்பது என் கருத்து.
நடைக்காக மட்டும் ஒரு கதை எழுதிப் பார்த்து அடிபடாமல் தப்பலாம். கருத்தை மட்டும் சொல்லி மற்ற விஷயங்களை தவிர்த்து விட்டும் அந்த வடிவத்தை சிதைக்காமல் கையாளலாம். நவரச உணர்வுகளுக்கும் இடம் கொடுக்கவல்ல ஒரு சாதனம் இது. நகைச்சுவையாக நாலு பக்கம் எழுதத் தெரிந்தால் தானே நானூறு வரை போக முடியும்? அந்த நாலு பக்க முயற்சிக்கு இது மிகப் பயன்படுகிறது. இப்படி பரிசோதனைகளுக்குள்ளாவதால், எளிதில் கையாளக் கூடியதாக இருப்பதால், எவரும் முதலில் நுழையும் நுழைவாயிலாக அமைந்து விட்டதால், இதற்கு விபத்துக்களும் அதிகம்!

Murindha, Murintha, Murindha, Ambugal, Ambukal, Ambugal, novel, Indra Soundarrajan, Visa Publications, Thirumagal Nilaiyam

Additional information

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “முறிந்த அம்புகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories