இந்திரா சௌந்தர்ராஜன் சிறுகதைகள்
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம். ஆனந்த விகடனில் நான் எழுதிய இந்தத் தொடர் இப்பொழுது உங்கள் கைகளில் புத்தகமாக… விகடனில் நான் எழுதிய மூன்றாவது தொடர் இது. ஆனால் முந்தைய இரு தொடர்களைக் காட்டிலும் கூடுதலான பரபரப்பையும், வாசக வரவேற்பையும் நான் இதில் பெற்றேன்.
குறிப்பாக இது தொடராக வந்த ஒவ்வொரு வாரமும் இதன் போக்கு குறித்தும், இதன் கட்டமைப்பு குறித்தும் என்னை வாசகர்கள் துளைத்தெடுத்தது ஒரு ஆச்சரியமான அனுபவம் எனக்கு. காரணம் இதன் கருவமைப்பும், அதை Suspense சிதறாமல் நான் கையாண்ட விதமுமே…
பொதுவாக என் நாவல்கள் மிக வித்யாசமாய் இருப்பதில் நான் மிகுந்த கவனத்துடன் இருப்பேன். எவர் போலவும் இருந்து விடாது என் வழி தனி வழி’ என்பதை மெய்ப்பிப்பதில் எனக்கு வேட்கை அதிகம்.
அதனாலேயே மனித வாழ்வில் சர்ச்சைக்குரிய, ஆராய்ச்சிக் குரிய, முடிவு காண மாட்டாத விஷயங்களைத் தொட்டு எழுது வதில் எனக்கு நாட்டமும் பிறந்தது எனலாம்.
நாட்டம் பிறப்பது பெரிதல்ல… அதில் ஆழத்துடன் அர்த்தம் சிதறாமல் இருப்பது மிக முக்கியம். இதற்காக உழைப்பதில் உள்ள மகிழ்ச்சி அளவிட முடியாதது.
இந்த ‘ரகசியமாக ஒரு ரகசியம்’ தொடரை எழுதும்போதும் என் உழைப்பும் கூட அளவிட முடியாததாகவே இருந்தது. இதன் வெற்றியின் பின்னால் இன்னொருவரும் இருக்கிறார். அவர் தான் ஆனந்த விகடன் ஆசிரியர் உயர்திரு எஸ். பாலசுப்பிரமணியம் அவர்கள். இந்தத் தொடரின் வெற்றிக்கு என்னிலும் இவரே முழு முதல் காரணமாய் இருப்பவர்… தன் இதழ்களில் வரும் தொடர்கள் தோல்வி என்ற இலக்கை அடைந்துவிடாது, வெற்றி, மிகப் பெரிய வெற்றி என்கிற இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்று உறுதியாய் இருப்பவர்.
இவர் போல் உழைப்பவரை நான் பார்த்ததில்லை.
இந்தத் தொடருக்கான இவர் உழைப்பும், ஆலோசனை களும் இந்தத் தொடரை வெற்றிக்கு மிகச் சுலபமாய் இட்டுச் சென்றன. இவருக்கு நன்றி என்கிற சொல்லைக் காட்டிலும் பெரிதான ஒன்றை என் வாழ்நாளில் காட்டினால்தான் நான் அர்த்தமுள்ளவனாகத் திகழ முடியும்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 184 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.