முறிந்த சிறகுகள்
Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Description
தமிழில்: கமலநாதன்
நான் பதினெட்டு வயதில் இருந்த போது, தன் வண்ணக் கதிர்களுடன் மாய வித்தை காட்டும் காதல் எனது கண்களைத் திறந்தது. தன்னுடைய அழகு சிவப்பு விரல்களால், அது என் மனதை, உள்ளுணர்வைத் தொட்டது.
தன் அழகால் எனது ஆன்மாவை விழித்தெழச் செய்த முதற் பெண் செல்மா கராமிதான். பேரன்புப் பூவனத்தில் என்னை இட்டுச் சென்றவள் அவள். அங்கே பகற்பொழுதுகள் கனவுகளைப் போலவும், இரவுகள் மண விழாக்களைப் போலவும் கழிந்தன.
செல்மா கராமி, தன் அழகையே எனக்கு முன் மாதிரியாக்கி, என்னை அழகை வழிபடுமாறு செய்தவள் அவள். தன் பிரியத்தின் மூலம், காதலின் இரகசியங்களை எனக்கு வெளிப்படுத்தியவள் அவளே. மெய்யான வாழ்வென்னும் கவிதையை அவள் எனக்குப் பாடிக் காட்டினாள்.
ஒவ்வொரு இளைஞனும் தன் முதற்காதலை நினைவில் வைத்துப் போற்றுவதோடு, அந்த விநோதமான நேரத்தை மீண்டும் கையகப்படுத்த முயற்சிப்பான். அது அவனது ஞாபகத்தில் இருந்து கொண்டு, அவனுடைய உணர்வின் அடியாழத்தில் மாற்றத்தை உண்டு பண்ணும். விவரிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாத ஒரு கசப்புணர்வை அவனிடம் அது விட்டுச் சென்றிருந்தாலும், அதையும் மீறி ஒரு மகிழ்ச்சியை அவனுக்குத் தரவே செய்கிறது.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN | 9788194967026 |



Reviews
There are no reviews yet.