மூன்று பாட்டிகள்
Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.
Description
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் குந்தாணிமேடு கிராமத்தில் பிறந்தவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதி “காலத்தின் முன் ஒரு செடி 2002லும், இரண்டாவது கவிதை நூல் “ஏரிக்கரையில் வசிப்பவன்” 2010லும் வெளிவந்தன. ஜீ.முருகனுடன் வனம் சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர். ஏலகிரி, ஜவ்வாது. நாயக்கனேரி போன்று மலைப் பகுதிகளில் பல்லாண்டுகளாக இலக்கியக் கூடல்களை ஒருங்கிணைத்து வந்தவர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கல்வித்துறை சார்ந்து “தமிழின் இரு முதல் நாவல்கள்”. “சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகள்” ஆகிய ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. 2011இல் உயிர்மை சுஜாதா அறக்கட்டளையின் விருதும் 2018இல் இலக்கிய வீதியின் அன்னம் விருதும் பெற்றுள்ளார். சாகித்திய அக்காதமி,Muse India.com-ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் மற்றும் ஜம்மு பல்கலைக்கழகம் ஆகியவை நடத்திய கவிதைத் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். கல்லூரியில் மாணவர்களின் வாசிப்புத்திறன் வளர்க்க “நூல்வாசி” என்ற அமைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 15.4 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.