விந்தன் கதைகள்
Original price was: ₹225.00.₹224.00Current price is: ₹224.00.
Description
கோவிந்தன் எனும் விந்தன் (1916-1975) தொடக்கத்தில் சிறுகதைகளை மிகுதியாக எழுதியவர். தொடர்ந்து திரைப்படத்துறை,இதழியல் துறைகளில் செயல்பட்டவர். இறுதிக்காலங்களில் அல்புனைவுகளை உருவாக்கியவர். பல்வேறு
தமிழ்ச் சிறுகதை மரபில் விந்தனின் இடம் தனித்தது. புதுமைப்பித்தன். அழகிரிசாமி ஆகிய படைப்பாளிகள் சிறுகதை எழுதிய காலங்களில் இவரும் சிறுகதை எழுதியிருக்கிறார். நவீன கல்விப் பயிற்சி பெற்ற. ஆங்கிலம் அறிந்த எழுத்தாளர்கள் செயல்பட்ட காலம் அது. விந்தன் பள்ளிக்கல்வி மட்டும் பெற்றவர். அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாக இதழ்களில் பணியாற்றியவர். அந்த அநுபவம் சார்ந்து சிறுகதை எழுதத் தொடங்கியவர்.
சிற்றூர்களில், நாட்கூலிகளாக வாழும் விவசாயத் தொழிலாளிகள் இவரது தொடக்க கால கதைமாந்தர்கள். நகரத்தில் வாழும் வாய்ப்பால், உதிரிப் பாட்டாளிகளின் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் சூழல் பெற்றவர். உதிரிப் பாட்டாளிகளை தமது புனைவில் முதன்மைப் படுத்திய முதல் எழுத்தாளர். இவ்வகையான எழுத்தாளராக வாழ்வதில் மனநிறைவு கொண்டவர். புதிதாக உருவாகிக் கொண்டிருந்த நகரத்தில், புதிதாக உருவான பாட்டாளிகளே இவரது கதை மாந்தர்கள். இம்மரபில் ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் முன்னோடி விந்தன்.
தமிழ்ச் சிறுகதை மரபில் யாரும் கவனத்தில் கொள்ளாத மனிதர்கள், குறிப்பாகப் பெண்களை, படைப்பில் கொண்டுவந்த இவரது தமிழ்ச் சிறுகதை மரபு தமிழ்ப் புனைவு மரபில் புதியது.
Additional information
| Weight | 0.95 g |
|---|---|
| Dimensions | 4 × 14.5 × 22.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 736 |
| Format | Hard cover |
| ISBN | 9788199770843 |



Reviews
There are no reviews yet.