ஹாம்லெட்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
ஷேக்ஸ்பியர் எழுதிய 37 நாடகங்களில் ‘ஹாம்லெட்’ மிக நீண்ட நாடகமாகும். இந்நாடகம் ஷேக்ஸ்பியரின் அமர காவியம் எனப்படுகிறது. ‘ஹாம்லெட்’ போன்ற ஓர் இலக்கியம் உலகில் இனி உருவாகுமா என்பது சந்தேகமே.
‘ஹாம்லெட்’ ஒரு தத்துவப் பெட்டகம் போன்ற நாடகம் என்றாலும் ஷேக்ஸ்பியர் இந்நாடகத்தை உருவாக்கும்போதும் தனது பாமர ரசிகர்களை எந்த இடத்திலும் மறந்து விடவில்லை. இந்த வகையில் ‘ஹாம்லெட்’டும் ஒரு ‘கமர்ஷியல்’ நாடகம்தான். ஆனால் மனித வாழ்வின் அவலங்களையும், கசக்கும் உண்மைகளையும் ஷேக்ஸ்பியர் தனது ஜனரஞ்சகமான கலைக்குள் பொதிந்து தந்துள்ளார் என்பதே உண்மை.
‘ஹாம்லெட்’ நாடகத்தில் கதாநாயகனின் தந்தை, தாய், சிற்றப்பன், காதலி, காதலியின் தந்தை, காதலியின் சகோதரன் என அனைத்து முக்கிய கதாபாத்திரங்களுமே கோர மரணத்தை தழுவுகின்றனர். அவலத்தின் உச்சமாக ஹாம்லெட்டும் மரணம் அடைகிறான். ஆனால் நல்லவர்களுடன் தீயவர்களும் அழிந்து போவதால் அதர்மம் எழுந்து நின்று ஆடாமல் ஓரளவிற்காவது நீதி நிலைபெறுகிறது.
ஷேக்ஸ்பியரின் சானட் தொடரைப் போலவே ‘ஹாம்லெட்’டும் ஒரு விதத்தில் மர்ம ராகம்தான். எனவேதான் அது பற்றிய விவாதங்களுக்கும் முடிவே இல்லாமல் போய்விட்டது.
Additional information
| Weight | 0.335 g |
|---|---|
| Dimensions | 1.5 × 14 × 21.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 248 |
| Format | paperback |
| ISBN | 9788195461561 |



Reviews
There are no reviews yet.