இந்திய தேசிய இயக்க வரலாறு
Original price was: ₹450.00.₹427.00Current price is: ₹427.00.
Description
இந்தியாவைப் பொறுத்தவரை தேசியம் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எதிர்வினை விளைவாகும். ஆங்கிலேய ஆதிக்க எதிர்ப்பே இந்திய தேசியமாக வடிவெடுத்தது! இந்தியா விடுதலையடையக் காரணமாக இருந்தது! நமது இந்திய தேசிய இயக்கம் வரலாற்றுச் சிறப்புடையது! தனித்தன்மை வாய்ந்தது ! உலகிலுள்ள வேறு எந்த நாட்டின் சுதந்திரப் போருடனும் ஒப்பிட முடியாத அளவு சிறப்புப் பெற்றது. ஏனெனில் இந்திய தேசிய இயக்கத்தின் இலட்சியமும், போராட்ட முறைகளும், வியூகமும்,உத்தியும், விளைவும் பிற போராட்டங்களிலிருந்து வேறுபட்டது என்று கூறினால் மிகையாகாது.
இந்திய தேசிய இயக்க வரலாறு எனும் தலைப்புக் கொண்ட இந்நூலினை 400 பக்கங்களுக்குமேல் 11 பகுதிகளாகப் பிரித்து மிகவும் விரிவாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் எழுதி யுள்ளவர் டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள். நூலாசிரியர் ஒரு வரலாற்று பேராசிரியர் மட்டுமல்ல, அவர் ஒரு வரலாற்றாளர். வரலாற்று உண்மைகளை தெளிவுபட எடுத்துரைப்பவர்.
இந்திய தேசிய இயக்க வரலாறு எனும் இந்நூலில் ஆங்கிலேய ஆதிக்கம், எதிர்ப்புக் கிளர்ச்சிகளும் இயக்கங்களும் உருவாதல், இந்தியப் பிரிவினை, இந்திய சுதந்திரம் பற்றிய அத்தியாயங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. நூலாசிரியர் இந்நூலில் இந்திய தேசிய இயக்கம் தொடர்ச்சியாகப் போராடி வெற்றியைப் பெறவில்லை என்றும், அது படிப்படியாக, விட்டுவிட்டு, பல முறைகளைப் பின்பற்றி எவ்வாறு வெற்றிக் கனியைப் பறித்தது என்றும் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 1.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Pages | 442 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.