கதாபாத்திரங்கள்
Original price was: ₹290.00.₹275.00Current price is: ₹275.00.
Description
ஒரு நல்ல கதையை நினைவில் நிறுத்துவது; அதில் வாழும் மனிதர்கள்தான். அவர்களே கதாபாத்திரங்கள். அவர்கள் பார்ப்பதற்கு நம்பத்தகுந்தவராகவும், உண்மையானவராகவும், உயிருடனும் தோன்ற வேண்டும். அதற்கான சரியான வழிமுறைகளை எளிய மொழியில் விளக்கும் புத்தகம்தான் இது.
ஒரு கதாபாத்திரம் எப்படி உருவாகிறது, அவர்களின் கடந்தகாலம், பயம், ஆசை, நிறை குறைகள், பலம்—இவை அனைத்தும் கதையின் இயக்கத்தை எப்படி மாற்றுகின்றன என்பதையும் இந்த நூல் தெளிவாகச் சொல்லித் தருகிறது. இதன் வழி நீங்கள், கதாபாத்திரங்களுக்கிடையிலான உறவுகள், மோதல்கள், அவர்களின் உள்ளுணர்வு மற்றும் மாற்றம் போன்ற முக்கிய அம்சங்களை படிப்படியாகக் கற்றுக்கொள்கிறீர்கள்.
கதாபாத்திரம் உயிர்த்தெழும்போதுதான் கதை உயிர் பெறும். அதை எழுத்தில் சாத்தியப் படுத்துவதற்கான நடைமுறைப் பயிற்சிகளும், எளிய விளக்கங்களும், நம்மைச் சிந்திக்கத் தூண்டும் உதாரணங்கள் கூட இந்தப் புத்தகத்தில் நிறைந்து கிடக்கின்றன.
எழுத்தாளர்கள், திரைக்கதை எழுத விரும்புபவர்கள், கதை உருவாக்கப் பயிற்சி பெறும் மாணவர்கள்—யாராக இருந்தாலும், உண்மையான கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு அவசியமான வழிகாட்டி.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Publisher | |
| Pages | 204 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.