கான்சாகிப் கம்மந்தான் மாவீரன் மருதநாயகம் வரலாறு
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
தமிழகத்தின் வீரத் தலைவர்களிலும் தளபதிகளிலும் சிறந்தவனாக கான்சாகிப் கம்மந்தானைக் கருத வேண்டியுள்ளது. இதுவரை வெளிவந்த இந்திய வரலாற்று நூல்களில், கான்சாகிப் போன்றவர்கள் போற்றப்படவில்லை. அந்தப் பெயரையே பல நூல்களில் காண்பதற்கில்லை. ஆனால், புரட்சிக்காரனாக – ஒரு வெள்ளையனால் எழுதப்பட்ட நூலில் தூற்றப்படுவது போல. போற்றப்பட்டுள்ளான். இந்தியாவில் ஆங்கில சாம்ராஜ்யத்தை நிறுவிய ராபர்ட்கிளைவ் – கான்சாகிப் இல்லாவிட்டால் – கிழக்கிந்திய கம்பெனியில் குமாஸ்தாவாகவே தான் இருந்திருப்பான்; அல்லது அவன் முயன்ற தற்கொலை முயற்சியில் வெற்றி பெற்றிருப்பான்!
ஆரம்பத்தில் ஆங்கிலேயரிடத்தில் சிப்பாயாக இருந்து, திறமையால் பதவியில் உயர்ந்து, வெற்றி தேடிக் கொடுத்ததால் பாராட்டப்பட்டுப் பின்னர் அனுபவத்தால் அடைந்த அரசியல் அறிவால் தனது தாயகத்து நிலப்பகுதிகளையெல்லாம் ஆளவந்தோரிடத்திலிருந்தே குத்தகைக்கு பெற்று, தனது இராணுவ தந்திரத்தால் பாண்டி நாட்டுப் பகுதிகளின் முக்கிய நகரங்களில் கோட்டைகள் அமைத்து, உள்நாட்டுப் பாளையக்காரர்களை அடக்கி ஒடுக்கித் தன்வசப்படுத்திக்கொண்டு ஒன்றரை ஆண்டுக்காலம் மதுரைத் தலைநகர்க் கோட்டையிலிருந்து போர்புரிந்து, வெற்றிபெறும் தருணத்தில் நயவஞ்சகர்களால் காட்டிக் கொடுக்கப்பட்ட மாவீரனின் வரலாறுதான் இந்த வரலாற்று நூல்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.