க.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்

Original price was: ₹750.00.Current price is: ₹699.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

புதுமைப்பித்தனுக்குப் பிறகு மொழிபெயர்ப்புத் துறையில் கணிசமான சாதனைகள் புரிந்தவர் என்று க.நா.சு. என்று அழைக்கப்படும் க.நா.சுப்ரமண்யத்தைச் சொல்ல வேண்டும். க.நா.சு. தன் மேதைமையைக் காட்டிக்கொள்ள மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டவர் அல்ல. தான் பெற்ற இன்பம் தமிழ் பெற வேண்டும் என்று அதை ஒரு இலக்கியக் கடமையாக, யோகமாக, தவமாகக் கைக் கொண்டவர். பிள்ளை இல்லாதவர்கள் தத்துப்பிள்ளை எடுப்பதைப்போல, படைப்பிலக்கியத்தில் பெரிதாக சாதிக்க முடியாதவர்களே மொழிபெயர்ப்புத் துறையில் கவனம் செலுத்துவதாக ஒரு கருதுகோள் உண்டு. பதினாறும் பெற்ற பிறகும் தத்தெடுத்தவர் என்று வேண்டுமானால் க. நா.சு.வைச் சொல்லலாம். அவரின் பொய்த்தேவு தமிழில் வந்த பத்து நல்ல நாவல்களில் ஒன்றாக விமர்சகர் சி. மோகனால் சுட்டப்படுகிறது. ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து அவன் மரணம் வரையிலான முழு வாழ்வும், குற்ற உணர்ச்சிகளால் அவன் மனம் படும் அவஸ்தையும் துல்லியமாய்ச் சித்தரிக்கப்பட்ட நாவல் அது. ‘அசுரகணம்’, ‘வாழ்ந்தவர் கெட்டால்’, ‘பெரிய மனிதன்’, போன்ற படைப்பிலக்கியங்களும், புகழ்பெற்ற நாவல்களை’ அறிமுகப்படுத்தி அவர் எழுதியுள்ள இரண்டு நூல்களும், சிறப்பான நூல்களைச் சிபாரிசு செய்த ‘படித்திருக்கிறீர்களா?’-வும், விமர்சனக் கலையும், சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘இலக்கியத்திற்காக ஒரு இயக்கமும்’ மயன் கவிதைகளும், க.நா.சு.வின் இலக்கியச் சாதனைகளை, ‘இலக்கிய வட்டம்’ நடத்திய அர்ப்பணிப்பை எழுத இந்த பதிப்புரை பக்கம் போதாது. இன்று பேசப்படும் போர்ஹேவை முப்பதாண்டுகளுக்கு மொழிபெயர்த்தவர். உலக இலக்கியத்தின் ஒளிவீச்சுக்களை உணர்ந்து உள்வாங்கி நம் இருளை நிராகரித்தவர். அதனால்தான் தமிழில் அசாதாரண எளிமை க. நா.சு.வுக்குக் கை கூடியது.

சமீபத்தில் ஒரு வார இதழில் க.நா.சு.வின் எழுத்துக்கள் இன்றும் கட்டு கட்டாய் பிரசுரம் காணாமல் இருப்பதாய் அசோகமித்திரன் எழுதியிருந்ததுதான் இந்த நூல் வருவதற்கான உந்துதல்
MARTIN SCORSCESE இயக்கிய இயேசுவைப் பற்றிய Last Temptation திரைப்படத்திற்கு நிகரானது க.நா.சு. மொழிபெயர்த்த போர்லாகர் குவிஸ்டின் ‘அன்பு வழி தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த, ஆனால் வாசித்தறிவதில் ஆர்வமுள்ள தமிழ் வாசகனுக்கு க.நா.சு மொழிபெயர்க்கவில்லையென்றால் நட்ஹாம்சனின் பசியும், நிலவளமும் தெரிய வாய்ப்பு உண்டா? தேவமலரை நுகரமுடியுமா? நோபல் பரிசு பெற்ற சில படைப்புகளைப் படித்திருக்க முடியுமா?

க.நா.சு. தன்னை முன்னிலைப்படுத்தி இலக்கிய இயக்கம் நடத்தத் தெரியாதவர். தன் பேச்சு பேசாதவர். டெல்லியில் நீண்ட கால வாசம், தேர்ந்த ஆங்கிலப் புலமை இருந்தும் தனக்கு லாபி பண்ணிக் கொள்ளாதவர். மேதைகள் எப்போதும் தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்வதில்லை. க.நா.சு.வின் இந்த அரிய மொழிபெயர்ப்புகள் தமிழுக்கு என்றும் வாளம் கூட்டக்கூடிய கலைச் செல்வங்கள். பாரதியார் கொண்டுவந்து குவிக்கச் சொன்ன கலைச் செல்வங்கள்.

க.நா.சு. போன்றவர்களின் கர்மயோகத்தால்தான் ஒவ்வொரு மொழியிலும் இலக்கியம் தழைக்கிறது. அடிஉரமிட்ட க.நா.சு.வின் இலக்கியப் பணி கொண்டாடவேண்டியது. வேர்களைப் போஷிக்காவிட்டால் விலாசமற்றுப் போகாதோ கிளைகள்.

ka, kaa, naa, na, su, soo, mozhipeyartha, molipeyartha, ulaga, ulaka, elakkiyam, elakiyam, ilakkiyam, ilakiyam, novel, short story, K. N. Subramaniyam, Sandhya Pathippagam

Additional information

Weight 0.9 g
Dimensions 4.3 × 15 × 23 cm
Publisher

Pages

624

Format

Hard cover

ISBN

9789384915865

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “க.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories