சிக்மண்ட் ஃபிராய்ட் வாழ்வும் உளவியலும்
Original price was: ₹185.00.₹175.00Current price is: ₹175.00.
Description
உளப்பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட். இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகளை வடிவமைத்தவர்களில் முக்கிய மானவர். தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ‘மனம்’ எனும் ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தில் கொண்டு வந்தவர். அவரது வாழ்வையும் அவர் முன்வைத்த கருத்துகளையும் எளிமையாக விவரிக்கிறது இந்த நூல்.
இன்றைக்கு உளவியல் எனும் வார்த்தை சாதாரணமாகிவிட்டது. நவீன சமூகச் சூழல் நம்மை உளவியல் நெருக்கடியில் ஆழ்த்துகிறது. இந்த நிலையில் ஃபிராய்டைப் பற்றிய இந்த நூல், நம் மனம் குறித்தும், மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் குறித்தும் ஒரு புரிதலை வழங்குகிறது. மனித மனதின் உள்ளடுக்குகள், அவை எப்படி நம் அன்றாட வாழ்வைக் கட்டுப்படுத்துகின்றன, பிறப்பில் இருந்து எப்படி நம் மனம் உருவாகி வருகிறது, மனிதர்களின் விC த்திரமான செயல்பாடுகள், மனநோய் பாதிப்புகள், கனவுகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள், அடக்கப்பட்டுத் தீராத விருப்பங்களால் சமூகத்தை எதிர்கொள்வதில் மனிதர்களுக்கு ஏற்படும் தடுமாற்றங்கள் என மனித மனத்தின் பரிமாணங்கள் குறித்து ஃபிராய்ட் வகுத்த கோட்பாடுகளை இவ்வளவு எளிதாக விளக்கும் நூல் தமிழில் இல்லை.
இந்நூலை எழுதிய எஸ்.சரத்குமார் மாவட்ட அரசு மனநல மருத்துவர் என்பது கூடுதல் சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால் நம்மை நாமே புரிந்துகொள்ள உதவும் கையேடு இந்த நூல்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |
| ISBN | 9789347936524 |



Reviews
There are no reviews yet.