ஜூலியஸ் ஃபூசிக் படைப்புகள்

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: சோ.சண்முகம், க.மாதவ்

ஜூலியஸ் ஃபூசிக் 1903 ஆம் ஆண்டு அன்றைய செக்கோஸ்லாவாக்கியா நாட்டில் பிறந்தார். 1943 அம் ஆண்டு பாசிக ஹிட்லரின் கொலைவெறி ரகசிய போலீஸ் படையால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். அவர் நாற்பதாண்டுகள் மட்டுமே வாழந்தாலும், உலகெங்கிலும் தொழிலாளிவர்க்க உணர்வுகளில் இன்றும் வாழ்கிறார். உழைக்கும் வர்க்க வீரராக என்றென்றும் வாழ்வார்.

இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புகொண்டு மாணவர்களை அமைப்பாக திரட்டுவதில் பணியாற்றினார். தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டார். “த்வோர்பா’ (படைப்பு) என்ற இதழின் தலைமை ஆசிரியரானார். பின்னர் அவர் செக்கோஸ்லோவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘ரூட் பிராவோ’வின் ஆசிரியரானார். வர்க்கப்போராட்ட கனல் மூட்டும் தனது எழுத்துக்களால் பாசிச எதிர்ப்புத் தீயைப் பரவச் செய்தார்.

1938 ஆம் ஆண்டு நாஜி அடக்குமுறை காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பத்திரிகைகளும் தடைச் செய்யப்பட்டன. ஃபூசிக்கும் அவரது சக தோழர்களும் தலைமறைவாக இயங்கி, தடைச் செய்யப்பட்ட பத்திரிகைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். ஹிட்லரின் கெஸ்டபோ போலீஸ் அவரை 1942 ஆம் ஆண்டு கைது செய்தது. 1943 செப்டம்பர் 8 ஆம் தேதி அவர் பெர்லினில் துக்கிலிடப்பட்டார்.

சித்திரவதை முகாமில் இருந்தபோது எழுதி ரகசியமாக அனுப்பட்ட குறிப்புகள்தான் இந்த தூக்குமேடைக் குறிப்புகள். உலகின் பல்வேறு மொழிகளில் இன்றும் உயிருடன் வலம்வருகின்றன. இந்த மகத்தான நூலை தமிழில் ஏற்கனவே பல மரியாதைக்குரியவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டனர். அவர்களுக்கு நன்றி. இந்த பதிப்பை சிந்தன் புக்ஸ் மிகை ஆர்வத்துடன் இப்போது ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்து கொண்டுவருகிறது. இத்துடன் ஜூலியஸ் ஃபூசிக் செக் மொழியில் எழுதி, In the Land Where Tomorrow Is Already Yesterday பிராக் நகரில் உள்ள ஆர்டியா நூலகம் ஆங்கிலத்தில் People Be on your Guard என்கிற தலைப்பில் தொகுத்து வெளியிட்ட திலிருந்து பத்து பொருத்தமான கட்டுரைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த கட்டுரைகளை முதலில் தமிழில் வெளியிட்ட பதிப்பங்களுக்கு நன்றி. இந்த பதிப்புடன் ஜூலியஸ் ஃபூசிக் பற்றி புரட்சி கவிஞர் பாப்லோ நெரூடா, எழுதிய அழகான கவிதையையும் சேர்த்துள்ளோம். பிழை திருத்தம் செய்து உதவிய தோழர் சி. பஞ்சவர்ணம் அவர்களுக்கு நன்றி.

Julius Fučík, Juliyas, Fusik, Fucik, Julias, Fiusik, Padaippugal, Padaippukal, Padaipugal, Padaipukal, Pataipugal, Pataipukal, Chinthan Books

Additional information

Weight 0.3 g
Dimensions 1.3 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

192

Format

paperback

ISBN

9789349994959

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஜூலியஸ் ஃபூசிக் படைப்புகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories