நான்தான் உலகத்தை வரைந்தேன்
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Description
குழந்தைப் பாடல்களில் திரும்பத் திரும்ப வரும் சொற்கள் அவற்றில் இசைப் பண்பை உருவாக்குகின்றன. இந்த உத்தியைப் பயன்படுத்தி மகிழால் தன் கவிதைகளில் ஆச்சரியமான காட்சிகளை உருவாக்க முடிகிறது. தர்க்கங்களை உதறிவிட்டாலே உலகமும் தன்னுடைய சலிப்பூட்டும் பழமையை உதறிவிட்டுத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளத் தயாராகிவிடுகிறது. மகிழால் ஒரே சமயத்தில் தர்க்கங்களைப் பொருட்படுத்தாத குழந்தையாயும் மொழியைப் பயன்படுத்தத் தெரிந்த கவிஞனாயும் இருக்க முடிகிறது. சிறுவனுடையவை என்கிற அலட்சியத்தையோ சலுகையையோ பரிவையோ நிராகரிக்கும் வலு கொண்டவை மகிழின் கவிதைகள். வடிவத்திலும் பண்பிலும் ஹைக்கூவை நினைவுபடுத்தும் சில சமயங்களில் தியானத்துக்கு மிக அருகேயும்கூட அவற்றால் செல்ல முடிகிறது.
– பா.வெங்கடேசன்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 9.8 × 16 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 88 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.