நீதித் திரைக்குப் பின்னே
Original price was: ₹380.00.₹361.00Current price is: ₹361.00.
Description
பொதுத் தேர்தல் ஒன்றை வைப்பதற்கு கோடிக்கணக்கில் செலவாகும். எனவே ஒரே சமயத்தில் தேர்தல் வைக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இந்தியா ஒரு துணைக்கண்டம் என்று அழைப்பதும் பல்வேறுவிதமான பருவ சூழ்நிலைகள் மக்களுடைய வாழ்க்கை நடைமுறைகள் இவற்றையெல்லாம் வைத்துதான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
சமூகக் கொடுமைகளின் வரலாற்றில் உலகம் முழுவதும் பதிவாகிவிட்ட கீழவெண்மணி படுகொலை வழக்கின் அநீதியை நீதிமன்றங்கள் இன்றுவரை களையவில்லை. அடித்தள மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால் கீழவெண்மணி வழக்கில் அளித்த தீர்ப்பு தவறு என்பதை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அறிவிப்பதே அம்மக்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
அரசமைப்புச் சட்டத்தை சீராய்ந்து அதில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கான பல முயற்சிகள் வெவ்வேறு காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. இருப்பினும், ஒரு சிலர் கருத்துகளைத் தவிர இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமைப்பையும் அதிகாரத்தையும் மாற்றுவதற்கான ஆலோசனை எவரும் இதுவரை வழங்கவில்லை. பெருகிவரும் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை கட்டுப்படுத்துவதற்கு வெவ்வேறு வழிகளில் ஆலோசனைகள் பல்வேறு தரப்பினரால் வழங்கப்படுகின்றன.
மொழிவாரி மாநிலங்களை அமைத்த பிறகு அந்தந்த மாநில மொழிகளே அங்கு அலுவல் மொழிகளாக மாறிவிட்ட பிறகு நீதிமன்றங்கள் மட்டும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவது ஏற்புடையதல்ல. இத்தகைய முயற்சி மாநில மொழிகள் வளர்வதைத் தடுப்பதோடு, பல்வேறு சமுதாயத்திலிருந்து வக்கீல்கள் உருவாகி வருவதை தடுத்து ஆங்கிலப் புலமை உள்ளவர்களே சட்ட நிபுணர்களாக ஆக முடியுமென்ற பிம்பத்தைத் தொடர்ந்து வளர்க்கும்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 248 |
| Format | paperback |
| ISBN | 9789394265455 |



Reviews
There are no reviews yet.