மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்!
Original price was: ₹320.00.₹288.00Current price is: ₹288.00.
Description
உண்மைகளை நேரடியாகச் சந்திக்க விரும்புகிறவர்களுக்காகத் திகைப்பூட்டும் ஒரு புதிய விஞ்ஞான, வரலாற்றுத் தொடரை ஜூ.வி-யில் அதிரடியாக ஆரம்பிக்கிறார் மதன்!’ என்ற அறிவிப்பு வெளியானதும், வாசகர்கள் ஆர்வத்துடன் வரவேற்றது, இந்தத் தொடரின் வெற்றியை உறுதி செய்தது.
உண்மையில் வாசகர்கள் திகைத்துத்தான் போனார்கள். தொடர்ந்து படித்து வந்த வாசகர்களின் சந்தேகங்களையும் அடுத்தடுத்து இடம்பெற்ற கட்டுரைகளில் தெளிவுபடுத்திக் கொண்டே வந்தார் மதன். இதற்காக இவர் திரட்டிய தகவல்களும் படித்த புத்தகங்களும் ஏராளம்!
ஆனந்த விகடனில் 1970-ல் கார்ட்டூனிஸ்ட் ஆகச் சேர்ந்து, விகடன் நிறுவனத்தின் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட் ஆகிய மூன்று பத்திரிகைகளுக்கும் இணை ஆசிரியராகப் பணியாற்றிய மதனின் இயற்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார்.
மனைவி ஜெயந்தி. இந்தத் தம்பதிக்கு திவ்யா, அமிதா என்று இரு மகள்கள்.
மதனின் பள்ளிப்பருவம் சென்னையில்… திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி.
கல்லூரிகள்: விவேகானந்தா, சென்னை மாநிலக் கல்லூரி. கல்லூரியில் அவர் படித்த சப்ஜெக்ட் சரித்திரமல்ல, பௌதிகம் என்பது குறிப்பிடத்தக்கது!
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.4 × 13.2 × 18.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 344 |
| Format | paperback |
| ISBN | 9788189780555 |



Reviews
There are no reviews yet.