பொருளாதாரம் நாட்டிலும் வீட்டிலும்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
இன்றைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில், பாதுகாப்பான வாழ்க்கைக் கான அடிப்படை சேமிப்பும் முதலீடும் தான். ஆனால் அவை இனி நம் சம்பளத்தால் மட்டும் தீர்மானிக்கப் படுவதில்லை. சர்வதேச அரசியல், வரி மாற்றங்கள், சந்தை அதிர்வுகள் என அனைத்தும் நம் பணவாழ்க்கையை நேரடியாக பாதிக்கின்றன.
2025ஆம் ஆண்டு உலக அரசியல், பொருளாதாரத்தில் பெரும் திருப்பங்களைக் கண்ட முக்கியமான காலகட்டம். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையில் ஏற்பட்ட மாற்றங்கள், அதற்கான இந்தியாவின் ஜிஎஸ்டி 2.0 போன்ற எதிர்வினைகள் முதல், தங்கம்-வெள்ளி விலை உயர்வுகள் வரை ஒரு காலத்தின் பொருளாதாரப் பதிவாகவும் இந்நூல் அமைகிறது.
நடுத்தர வர்க்கத்தின் பாரம்பரிய முதலீடான தங்கம் இன்னும் பாதுகாப்பானதா? தங்கம்-வெள்ளி விலைகள் எங்கு செல்கின்றன? கிரிப்டோ கரன்சிகள், மின்சார வாகனங்கள் போன்ற புதிய துறைகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன? தனிநபர் மற்றும் குடும்ப சேமிப்பை எவ்வாறு திட்டமிடலாம்? என்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்களையும் அளிக்கிறார் ஆசிரியர் சோம. வள்ளியப்பன்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமல்ல; அனைத்து மாணவர்களும் அரசியல் நோக்கர்களும், நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விடயங்கள் இந்நூலில் இருக்கின்றன.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 120 |
| Format | paperback |
| ISBN | 9789347936371 |



Reviews
There are no reviews yet.